கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!!

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!!



மூக்கில் இரத்தம் வடியக் காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்!

மூக்கில் இரத்தம் வடியக் காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்!


குறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக காற்றானது எளிதில் செல்ல முடியாமல் தடை ஏற்படும் போது எழும் சப்தம் தான் குறட்டை. பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக குறட்டை விடுவார்கள்.

குறட்டை யை சாதாரணமாக விடக்கூடாது. அதை சரிசெய்ய முயலாவிட்டால், அதனால் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே குறட்டை பிரச்சனை உள்ளவர்கள், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்.

இங்கு குறட்டை பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் 3 உணவுகள் குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

ஆலிவ் ஆயில்

இந்த அற்புத எண்ணெயில் ஏராளமான நன்மைகள உள்ளது. அதில் ஒன்று குறட்டை பிரச்சனையைப் போக்கும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.

புதினா புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.

இல்லாவிட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

ஏலக்காய் இந்த அரேபியன் மசாலாப் பொருளானது, சமையலில் உணவிற்கு நல்ல மணத்தையும் சுவையையும் வழங்குவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. முக்கியமாக ஏலக்காய் சளியை இளகச் செய்து, சுவாச பிரச்சனைகளைச் சரிசெய்யும்.

அதற்கு தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்லவோ அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, குடித்து வரவோ செய்யலாம்.







குறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்!


சூடாக குடிப்பவர் என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”

காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.

சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.

காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.

“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.

ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.

* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.

* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால், உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.

* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.

* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம். பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது. சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது. 

மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு. அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.

சூடாக காபி, டீ குடிப்பவரா நீங்கள்


பிறந்த குழந்தை ஒரு மென்மையான பஞ்சு போன்றது. எப்படி ஒரு பஞ்சை கையாள்கிறோமோ, அதேப் போன்று குழந்தையையும் கையாள வேண்டும்.

சுகப்பிரவசம் நடக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதியான வடிவில் தலை இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சில சமயங்களில் சிலருக்கு தலையானது நீளமாக, வட்டமாக, ஏன் சிலருக்கு சதுர வடிவில் கூட தலை இருக்கும். இவை அனைத்திற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

பிறந்த குழந்தை ஒரு மென்மையான பஞ்சு போன்றது. எப்படி ஒரு பஞ்சை கையாள்கிறோமோ, அதேப் போன்று குழந்தையையும் கையாள வேண்டும். இல்லையெனில் குழந்தையின் தலை வடிவம் மாறிவிடும்.

இத்தகைய காரணங்களால் குழந்தையின் தலையின் வடிமானது மாறியிருந்தால், அத்தகைய வடிவத்தை சரிசெய்ய ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* குழந்தைகளை படுக்க வைக்கும் போது எப்போதும் ஒரே திசையில் படுக்க வைக்காமல், அவர்களை அவ்வப்போது திசை மாற்றி படுக்க வைக்க வேண்டும். இதனாலும், தலையை சரியான வடிவத்தில் கொண்டு வர முடியும்.

* குழந்தை ஒரே திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தால், தலையின் வடிவம் பாதிக்கப்படும்.

எனவே அவர்கள் ஒரே திசையை பார்த்துக் கொண்டிருக்காமல் இருக்க, அவர்களது கவனத்தை அவ்வப்போது திசை திருப்புவதற்கு ஒலி எழுப்பும் பொருளை அவ்வப்போது எழுப்பி, அவர்களை அனைத்து திசையிலும் சுற்றி முற்றி பார்க்க வைக்க வேண்டும்.

* குழந்தையை கையில் அதிக நேரம் வைத்திருக்க கூடாது. தொட்டிலில் போட்டு ஆட்டும் போது தலை சரியான வடிவில் வரும்.

* காலையில் குழந்தையை குளிக்க வைக்கும் போது தலையில் எண்ணெய் தேய்ந்து மசாஜ் செய்து வரலாம். படிப்படியாக தலையின் வடிவம் மாறும்.

- மேலும் குழந்தையை கையாளும் போது மிக கவனமான கையாள வேண்டும்.

பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்


நாவல் பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அற்புத பழம்.

நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது.

'கால்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்தியடையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

நாவல் பழத்திலுள்ள 'ஜம்போலினின்’ எனும் 'குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.

இந்தப் பழத்தில் 'குயுமின்’ எனும் 'ஆல்கலாய்டு’ உள்ளது. இது தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடும். 

உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், கேரட், மாதுளையைவிட நாவல் பழத்தில் அதிகம். இதனால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும்.

நாவலை தொடர்ந்து உண்டுவர தோல் பொலிவு கிடைக்கும். வாய் முதல் குடல் வரை ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்தும். அதிகமாக சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் போக்குக் கட்டுக்குள் வரும். பசியைத் தூண்டும்.

நாவல் பழம் குளிர்ச்சியானது என்பதால் உடல் சூட்டைத் தணிக்கும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும், மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக் கூடியது. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான சிக்கல், வெள்ளைப்படுதல், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றையும் நாவல் பழம் சரியாகும்.

நாவல் பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். இது தவறு! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அற்புத பழம்.

இப்போது நகர்புறங்களில் விதையில்லா 'ஹைப்ரிட் வகை’ நாவல் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இதில் கொஞ்சம்கூட சத்து கிடையாது. நாட்டு நாவல் பழத்தில் மட்டுமே இத்தகைய சத்துக்கள் அனைத்தும் உள்ளது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாவல் பழம்


உங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதய நலனை பற்றி எவ்வாறு அறிவது என தெரியுமா?

உங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதய நலனை பற்றி எவ்வாறு அறிவது என தெரியுமா?


பலரும் அறியாத மனித உடலை பற்றிய வினோதமான தகவல்கள்!

பலரும் அறியாத மனித உடலை பற்றிய வினோதமான தகவல்கள்!


பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன.

பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர். இது ஓர் அரும்பெரும் மருத்துவ உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடற்சக்தியை வலுப்படுத்த பேரிச்சம் பலம் உதவுகிறது.

இந்த பெண், தொடர்ந்து 14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் உண்டு வர முடிவு செய்தார். 14 நாட்களின் முடிவில், இந்த பெண்மணியின் உடல் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு இருந்தது. 14 நாட்கள் கழித்து இந்த பெண்ணிடம் ஏற்பட்ட ஆரோக்கிய மாற்றங்கள்...

செரிமானம்: தொடர்ந்து 14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்ததால், குடல் இயக்கம் சிறந்து, செரிமானம், வாயுத்தொல்லைகள் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, பெருங்குடல் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் இருக்க பயனளிக்கிறது.

வலிநிவாரணி: பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக விளங்குகிறது. இது வலிநிவாரணியாகவும், கை கால் வீக்கத்தை குறைக்கவும் பெருமளவு உதவுகிறது. மேலும், மெக்னீசியம் இதய நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது.

உயர் இரத்த அழுத்தம்: பேரிச்சம்பழத்தில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவுகின்றன. மேலும் தொடர்ந்து பேரிச்சம்பழம் உண்டு வருவது 10% ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்கிறது.

அறிவாற்றல்: பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது. இதனால், ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் அதிகரிக்கிறது.

மேலும், கர்ப்பிணிப்பெண் வலி இன்றி சுகப்பிரசவம் அடைய, கடைசி மாதம் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம் என கூறப்படுகிறது. மேலும், பேரிச்சம்பழம் பிரசவத்திற்கு பிறகான உடல் எடையை குறைக்கவும் பலனளிக்கிறது.

எனவே, இவ்வளவு அரும்பெரும் நன்மைகளை அளிக்கும் பேரிச்சம் பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டு வர மறக்க வேண்டாம். பேல்பூரி, காளான், பெப்ஸி, கோலாவிற்கு செலவழிப்பதை, நல்லவழியில் செலவழித்து ஆரோக்கியம் மேன்மையடைய முயற்சி செய்யுங்கள்!



14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்ட பெண் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்!


இரத்த தானம் செய்தால் நன்மைகளைத் தான் ஏராளமாக பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

மனிதனின் உடலில் சுமார் 5-6 லிட்டர் இரத்தம் இருக்கும். இரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் 300 மிலி இரத்தம் வரை தானம் செய்ய முடியும். இப்படி தானம் செய்யப்படும் இரத்தமானது 2 வாரங்களில் நம் உடலில் உண்ணும் உணவுகளால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.

இரத்த தானம் செய்வது என்பது, உடலில் புதிய இரத்தத்தின் அளவை அதிகரிப்பதற்கு சமம். எனவே உங்களுக்கு புதிய இரத்த செல்கள் வேண்டுமானல், இரத்த தானத்தை செய்து வாருங்கள்.

சமீபத்திய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்து வருவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இரத்த தானம் செய்யுங்கள்.

உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகமாகும் போது, கல்லீரல் செயலிழப்பு மற்றும் கணைய பாதிப்பு போன்றவை ஏற்படும். 

ஆனால் இரத்த தானத்தை ஒருவர் செய்து வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து வெளியேற்றப்பட்டு, கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு ஏற்படுவது குறையும்.

அடிக்கடி இரத்த தானம் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாயின், பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

இரத்த தானம் செய்வதால், உடலில் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். இதனால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் குறையும்.

இரத்த தானம் செய்யும் செய்யும் போது, மனதில் மற்றவருக்கு உதவிய சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைத்து, மனதில் ஒருவித மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடும்.

இரத்த தானம் செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வோர் 18 வயது நிரம்பியராகவும், 60 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

எந்த ஒரு நோய்த்தொற்றும் இல்லாதவராக இருக்க வேண்டும். இரத்த ஹீமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஒரு ஆண் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். அதேப் போல் ஒரு பெண் 4 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.

யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்: அதனால் கிடைக்கும் நன்மைகள்



வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.

குங்குமப்பூ

சிறிது குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.

தயிர்

பலரும் தயிர் சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தான் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. அதற்கு வெறும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் பால் பவுடர்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி சரும நிறம் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன்

வெள்ளரிக்காய் சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி வர, சரும வறட்சி நீங்குவதோடு, சரும நிறமும் மேம்படும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள அழுக்குகள், கருமைகள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.


தக்காளி மற்றும் தயிர்

தக்காளியை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமம் பொலிவோடு காணப்படும்.


பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர்

தினமும் இரவில் படுக்கும் முன் பச்சை பாலில் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவுவதன் மூலமும், சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு

தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதோடு, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சரும நிறம் அதிகரிக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

தேனுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்துக் காணப்படும்.

ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இதோ சில அற்புத வழிகள்!..



மன அழுத்தமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

மன அழுத்தமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!


சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் மெலிந்தே இருக்கும்.

இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வயிறு முட்ட சாப்பிட்டால் உடனே உடல் எடை கூடும் என நினைப்பது தவறு. என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.சத்தில்லாத சாப்பாட்டினை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் இருக்கும்.

சரி நன்றாக ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டும் உடல் எடை கூடவில்லையா? அப்படியென்றால் நீங்கள் கவனம் கொள்வது எந்த வகையான காய்கள் மற்றும் உணவுகள் உடல் எடையைக் கூட்டும் என தெரிந்து கொண்டு அவற்றை சாப்பிடுங்கள்.

எளிதில் பூசியது போல் ஆகிவிடுவீர்கள். அவ்வகையில் இந்த குறிப்புகள் உடல் எடைஅயை கூட்டும் வகையிலேயே தரப்படுகின்றது. படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பிரெட் வகைகள் : முழுதானிய வகைகள் கொண்ட பிரெட் இப்போது கடைகளில் கிடைக்கிறது, அவற்றை தினமும் வெண்ணெய் தடவி உண்டால் 15 நாட்களுக்குள் உடல் பூசியது போல் மெருகேறும்.

பிரட்டில் காய்கள் சேர்த்து வெண்ணெய் மற்றும் சீஸ் கலந்து சாண்ட்விச் போல சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் எடையையும் கூட்டும்.

எள்ளு : எள்ளு உடல் மெலிந்தவர்கள் உண்டால் , வாளிப்பான உடல் கிடைக்கும். எள்ளு மிட்டாய், எள்ளுப் பொடி, எள்ளுச் சட்னி ஆகியவற்றை செய்து சாப்பிடலாம். எள்ளு, சூடு என்பதால் சாதத்தில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

பால் மற்றும் தயிர் : பாலில் 30 கிராம் புரோட்டின் மற்றும் கால்சியம் கொழுப்பு அடங்கி உள்ளது. தினமும் நீர் கலக்காத பாலை குடித்து வந்தால் உடல் பருமனாகும். ஓரளவு பருமனாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பசும் பாலை குடிகலாம்.

இதில் கொழுப்பு இல்லை. நீங்கள் மிகவும் ஒல்லியாக நோஞ்சான் உடம்பு கொண்டிருந்தால், உங்களுக்கு எருமைப் பால் கிடைக்குமென்றால், அதனை பருகுவது சிறந்தது. மிக கொழுப்பு கொண்டுள்ளது. அதனை குடித்தால் எளிதில் உடல் பருமனாகிவிடும்.

ஆனால் ஒரு கிளாஸ் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் குடித்தால் மந்தத் தன்மை வரும். எருமைப் பாலில் கெட்டித் தயிர் சாப்பிட்டு வந்தாலும் உடல் பருமனாவது கியாரெண்டி.

சோயா மில்க் : சோயா மில்க் தினமும் குடித்து வந்தாலும் உடல் எடை கூடும். இதில் அதிக அளவு புரோட்டின் உள்ளது. தேவையான எல்லா ஊட்டச் சத்தையும் சோயா மில்க்கில் பெறலாம்.

யோகார்ட் : யோகார்ட் உடல் எடையை அதிகரிக்க சிறந்த உணவு வகை. தினமும் ஒரு கப் யோகார்ட் சாப்பிடுங்கள். அதில் கால்சியமும் உள்ளது. ஜீரணத் தன்மையை அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகப்படுத்துங்கள். இது உடல் பருமனை கூட்டும். இது இதயத்திற்கும் நல்லதை செய்யும். அது போலவே க்டலை எண்ணெய். சுத்தமான கடலை எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துங்கள். உடல் எடை கூடும்

அவகேடோ : அவகேடோவில் 140 கலோரி உள்ளது. விட்டமின், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்களும் கொண்டுள்ளது. அவகாடோஅவை தினமும் சாப்பிட்டு வாருங்கள். பலன் கிடைக்கும்.

நட்ஸ் : முந்திரி, பாதாம் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பாதாமை அரைத்து, அவற்றை பாலில் கலந்து குடித்தால் உடல் பருமனாகும்.

காய்கறிகள் : பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவை உடலுக்கு போஷாக்கினை தந்து எடையை கூட்ட உதவும் காய்கள். அவித்த உருளைக் கிழங்கு, முருங்கைக் காய் ஆகியவையும் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று கண்ட எண்ணெயில் செய்த சிப்ஸ் வகைகளோ, கொழுப்பு நிறைந்த உணவுகளே சாப்பிடாதீர்கள். இவை ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையையே தரும். இதயத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்திவிடும்.

ஆகவே உணவோடு உஅண்வாக நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கச் செய்யுங்கள். நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஒழுங்கு முறை உடல் எடையை சரியாக பராமரிக்க உதவும்.

இந்த உணவுகள் எல்லாம் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என உங்களுக்கு தெரியுமா?


வெந்தயக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன பயன் தரும் பாகங்கள். வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், தாய்ப்பாலை பெருக்கும். 

தீப்புண்ணை ஆற்றும். மது மேகத்தை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளை பழுத்து உடையச் செய்யும். வலியை போக்கும் சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும், உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும். ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேக வைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். வெந்தயப் பொடியால் மேகம் குணமாகும். வெந்தயத்துடன் சமன் சீமையத்தியின் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாக குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருத்தரிக்காது. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊற வைத்துத் தலை முழுகினால் பலன் கிடைக்கும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும், பருவும் குணமடையும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை


வளர்ந்த பின் சிறு நீர் படுக்கையில் கழிப்பது, குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையை தரும். வெளியில் எங்கும் செல்ல வெட்கப்படுவார்கள்.

உங்கள் குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்களா? அதனைத் தடுக்க இதோ எளிய வழிகள் !

சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்னென்ன?

home remedies bed wetting

முதல் ஐந்து வயது வரை ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது நார்மலான விஷயம்தான்.

பத்துவயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகி அதற்கு உரிய தீர்வினை நீங்கள் காண வேண்டும். வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

மூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர்பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை.

ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் பாஸிடிவான ரிசல்ட் விரைவில் கிடைக்கும்.

பட்டை படுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த தீர்வை தரும். பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள்.

அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம். தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள். வீட்டில் முயன்று பாருங்கள்.

நெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.

அதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது.

வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் தரலாம். எல்லா வகையான உணவுகளிலும் வெல்லத்தை கலந்து கொடுப்பது உகந்த பலனைத் தரும்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்


கறிவேப்பிலையின் கணக்கற்ற நன்மைகள்

கறிவேப்பிலையின் கணக்கற்ற நன்மைகள்


தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! அதிலும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.

செரிமான கோளாறுகள் நீங்கும் பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் 3 உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறந்த வலி நிவாரணி பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. 

இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.

ஆரோக்கியமான பிரசவம் 69 கர்ப்பிணிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், பிரசவம் நடைபெறுவதற்கு 4 வாரத்திற்கு முன்பிருந்து தினமும் 3 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்த பெண்களுக்கு பிரசவம் எளிமையாக நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும் பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். 

எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பக்கவாதம் முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம்.

மூளையின் செயல்பாடு மேம்படும் யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும் பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.




தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!


வருடம் முழுவதும் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. விலை மலிவில் கிடைப்பதால் தான் என்னவோ பலருக்கும் இந்த பழத்தைப் பிடிப்பதில்லை போலும். ஆனால், என்ன தான் விலை குறைவில் கிடைத்தாலும், பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? இந்த பழத்தை ஒருவர் அன்றாடம் தங்களது டயட்டில் சேர்த்து வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். அதிலும் பப்பாளியை ஜூஸ் செய்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால், உடலினுள் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! ஏனெனில் இந்த கலவை உடலின் பல்வேறு உறுப்புக்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். சரி, இப்போது அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும், எப்போது பருக வேண்டுமென்றும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் காண்போம்.

இதய நோய்கள் தடுக்கப்படும் பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்றவை வராமல் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபோலேட், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையானவை. ஆகவே இந்த கலவையை தினமும் ஒருவர் பருகி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.

செரிமானம் சீராகும் பப்பாளி எலமிச்சை கலவையில் உள்ள பீட்டா-கரோட்டீன்கள், வைட்டமின்கள், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.

புற்றுநோய் தடுக்கப்படும் பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்களான குடல், புரோஸ்டேட், இரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, அசாதாரண செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கும்.

ஆர்த்ரிடிஸ் பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையை உடலினுள் உட்செலுத்தும் போது, அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கும்.

பார்வை கோளாறு இந்த கலவையில் வைட்டமின் ஏ, சி போன்றவை ஏராளமாக உள்ளதால், இது பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு எந்த பார்வை கோளாறும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்த கலவையை தினமும் பருகி வாருங்கள்.

மன அழுத்தம் குறையும் பப்பாளி, எலுமிச்சை கலவையில் உள்ள வளமான வைட்டமின் சி, மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.

ஜூஸ் செய்யும் முறை சிறிது பப்பாளி பழத்தை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளரில் 3 டேபிள் ஸ்பூன் பப்பாளி ஜூஸையும், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் ஒன்றாக சேர்த்து கலந்து பருக வேண்டும்.

எப்போது பருக வேண்டும்? இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி தினமும் பருகி வந்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.










பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?


வாழைத்தண்டு மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும். இப்போது வாழைத்தண்டு பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தயிர் - ஒரு கப்

வாழைத்தண்டு - 300 கிராம்

கொத்தமல்லித் தழை - சிறிது,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* கொத்தமல்லி, வாழைத்தண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடைந்த தயிரை ஊற்றி அதில் நறுக்கிய கொத்தமல்லி, வாழைத்தண்டு, உப்பை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.

* சத்தான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

பலன்கள்:

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். 

சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி


குழந்தைகள் ஏன் சிறு வயதிலே பருமன் ஆகின்றனர் என்கிற காரணங்களையும், அவர்களின் உடல் பருமனைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

சிறு வயதிலேயே குழந்தைகள் பருமனாக இருப்பது கவலைப்படக்கூடிய விஷயம் தான். பொதுவாக பள்ளிக்கு சென்றால் பல குழந்தைகள் பருமனாகவும் உடல் எடை அதிகமாகவும் இருப்பது கண்டால் ஆச்சரியமாக தான் இருக்கும்.

பல பெற்றோரும் தத்தம் குழந்தைகளின் உடல் பருமன் கொண்டு வருத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

உடல் பருமன் ஆவதற்கு மிக முக்கியமான காரணம் அதிக கலோரி உட்கொள்ளுதல் மற்றும் தொலைகாட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகும். அவை அவர்களை நகர விடாமல், ஒரே இடத்திலேயே முடக்கி விடுகிறது.

இது போன்ற முடக்கும் விஷயங்களில் மனதை செலுத்தும் குழந்தைகள் எங்கேயும் நகராமல் இருப்பதால் உண்ண, உறங்க என்று பழகிவிடுகின்றனர். எனவே உடலில் எடை அதிகம் கூடி விடுகிறது.

சில குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளும் அதிகம் சாப்பிடுவார்கள். எடுத்தவுடன் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள் உண்பது என்று ஆக்கி விட கூடாது.

ஏனெனில் அது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி விடும். எனவே படிப்படியாக உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

முதலில் உடல் எடைக்கு காரணமான தின்பண்டங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

பரவலாக உடல் எடையை அதிகரிக்கக்கூடிய உணவுகளான குளிர்பானங்கள், மில்க்ஷேக் வகைகள் மற்றும் வறுத்த உணவுகளான பிரஞ்சு ப்ரை, அதிகப்படியான வெண்ணெய், பாலாடை மற்றும் ரொட்டி வகைகள், பிஸ்கட், ஐஸ் க்ரீம்கள், சாக்லெட், பிட்சா, பர்கர், பாவ் பாஜி போன்ற பண்டங்கள் ஆகும். இந்த உணவுகளையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை ஏதும் ஊட்டச்சத்து சேர்ப்பதில்லை, மாறாக உடலில் தேவையற்ற கலோரிகளையே சேர்க்கின்றன.

காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு தேவையான சக்தியில் பெரும் பகுதியை அளிக்கும். ஆகவே காலை உணவை தவிர்த்தல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதையும் தடுத்துவிடும்.

இந்த நிலை குழந்தைகளின் ஆற்றலை குறைத்து, அவர்களது செயல்பாடுகளை மந்தப்படுத்தி, உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.

குழந்தைகள் தினமும் காலை உணவு எடுத்து கொள்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். மேலும் வீட்டில் செய்யும் உணவுகளான இட்லி, தோசை போன்ற உணவுகளே அவர்கள் எடுத்து கொள்ளும் உணவில் அதிகம் இருக்க வேண்டும்.

அதிக அளவில் சர்க்கரை உள்ள கார்ன் ப்ளாக்ஸ் (Corn Flakes) போன்ற உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் மூன்று வேளை ஆரோக்கியமான தின்பண்டங்களான முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், சாலட் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

பேக்கரி பொருட்கள் மற்றும் வறுத்த உணவுகள் மூலம் உடலில் உருவாகும் கொழுப்புகளை காட்டிலும், ஆரோக்கியமான தின்பண்டங்கள் மூலம் உருவாகும் கொழுப்புகளே உடலுக்கு நல்லது.

குழந்தைகள் நிறைய தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் எந்த அளவு தண்ணீர் பருகுகின்றனர் என்பதை அவர்கள் சிறுநீர் கழிக்க எத்தனை முறை டாய்லெட் செல்கிறார்கள் என்பதை கொண்டு கணித்து விடலாம்.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை பற்றி அறிவுறுத்த வேண்டும். அவர்களை பள்ளியில் விளையாட்டு அணிகளில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகளின் தொலைக்காட்சி பார்ப்பதை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் இம்மாதிரியான பழக்கங்களுக்கு குறைவான மற்றும் நிலையான நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் வேண்டும்.

குழந்தைகள் குண்டாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி அவர்களிடம் சொல்லி கொண்டே இருக்கக்கூடாது. அது அவர்கள் மனதில் இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். மாறாக நல்ல உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் உடல் குண்டாவதை தடுக்க செய்ய வேண்டியவை