ஆட்டோவில் செல்ல ரூ 50, 100 தேவையில்லை- ரூ. 1 மட்டுமே போதும்.......

Share this :
No comments


தமிழக முதல்வராக ஜெயலலிதா 6ஆவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டு கோவை மக்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரு ரூபாய் வாங்கி ஒரு தொண்டர் சிறப்புசேவை செய்துள்ளார்.

கோவை எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மதிவாணன். இவர் அதிமுக தீவிர தொண்டர்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும், தமிழக முதல்வராக ஜெயலலிதா 6ஆவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டும் கோவை மக்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரு ரூபாய் வாங்கி ஒரு தொண்டர் சிறப்புசேவை செய்துள்ளார். நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை பயணிகளிடம் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுள்ளார்.

நேற்று மட்டும், ஆட்டோவுக்கு 400 ரூபாய்க்கு டீசல் போட்டு, 240 கிமீ தூரம் வரை ஓட்டியுள்ளார். இந்த சிறப்பு சேவை மூலம் சுமார் 150க்கும் அதிகமான பயணிகள் பலன் பெற்றுள்ளார்களாம்.

இது குறித்து, ஆட்டோ டிரைவர் மதிவாணன் கூறுகையில், தமிழக முதல்வராக அம்மா முதல்வரானதை முன்னிட்டு இந்த சேவையை செய்துள்ளேன். மக்களுக்காக அம்மா செய்த சேவையை கணக்கிட்டால், எனது சேவை மிகவும் சாதாரணம் என மனம் உருகிறார்.

No comments :

Post a Comment