ஜுன் 17 வெளியாகும் தனுஷின் அம்மா கணக்கு
தனுஷ் நடிக்கும் படங்களைவிட தயாரிக்கும் படங்கள் அதிகம் லாபம் சம்பாதிக்கின்றன. எதிர்நீச்சல், காக்கிசட்டை, நானும் ரௌடிதான் என்று அவர் தயாரித்த அனைத்துப் படங்களும் ஹிட்.
அதாவது, அவரது தயாரிப்பில் பிற ஹீரோக்கள் நடித்தப் படங்கள்.
இந்த வருட தொடக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் தொடங்கிய படம், அம்மா கணக்கு. இந்தியில் வெளியான, நில் பேட்டே சனட்டா படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த அம்மா கணக்கு. இந்திப் படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே அம்மா கணக்கையும் இயக்கி உள்ளார். இசை இளையராஜா. அம்மா - மகளாக ரேவதி, அமலா பால் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஜுன் 17 -ஆம் தேதி தனுஷ் வெளியிடுகிறார். தயாரிப்பில் அவர் அடைந்துவரும் தொடர் வெற்றியை இந்தப் படமும் துண்டிக்காது என்று நம்புவோம்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment