குழப்பத்தில் விஜயகாந்த்: பாஜக உடன் சேர்ந்து கரை சேர திட்டம்

Share this :
No comments



தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அரசியல் வாழ்வில் இது ஒரு கடினமான காலம் எனலாம். கட்சி ஆரம்பித்தலில் இருந்து சேர்த்து வந்த செல்வாக்கு வாக்கு வங்கி என எல்லாத்தையும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தொலைத்துவிட்டு விழி பிதிங்கி நிற்கிறார்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என எந்த பக்கம் போவது என தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது அவரது தற்போதையை நிலமை. தேர்தல் தோல்வியால் விரக்தியில் சோர்வில் இருக்கும் தொண்டர்களை வலுபெற செய்ய வேண்டும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை அடுத்த கட்சிக்கு ஓட விடாமல் தக்க வைக்க வேண்டும்.

இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்க முயல வேண்டும். இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் வேறு வருகிறது. தேர்தலை சந்தித்து தங்கள் பலத்தை நிரூபிக்க வேணடிய கட்டாயம். கட்சி அங்கீகாரம், சின்னம் போன்றவற்றை திரும்ப பெற வேண்டும். இப்படியாக பல இக்காட்டான சூழலில் உள்ளார் விஜயகாந்த்.

இந்நிலையில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தோல்வியுற்ற வேட்பாளர்கள், அடிமட்ட நிர்வாகிகள் என அனைவருடனும் ஆலோசனை நடத்தி வரும் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திக்கலாமா இல்லை கூட்டணியுடன் சேர்ந்து சந்திக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி கூட்டணி வைத்தால் மக்கள் நல கூட்டணி சேர்ந்தால் சேதாரமாகி இருக்கும் கட்சி இன்னும் சேதாரமாகி விடும் என கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில் பாஜக பக்கம் சாய்ந்தால் நாம் கரை சேர முடியுமா என விஜயகாந்த் நினைப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விஜயகாந்தை பற்றி அக்கறையாக கேட்டதாகவும், அந்த செய்தி விஜயகாந்த் காதுக்கு போனதாகவும், இதனால் விஜயகாந்த் பாஜகவிடம் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என யோசிப்பதாக பேசப்படுகிறது.

ஆளும் கட்சி போட்டிருக்கும் அவதூறு வழக்குகளை சந்திக்க பாஜக உறுதுணையாக இருக்கும் எனவும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் பாஜக உதவும் எனவும் விஜயகாந்த் நினைப்பதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

No comments :

Post a Comment