இதுதான் நம்ம 'கபாலி'யின் ஆறு வெற்றி இரகசியங்கள்!

Share this :
No comments

கே.பி இவருக்கு பெயரிலேயே காந்தத்தை வைத்ததாலோ எனவோ திரையிலகில் காலடி வைத்த நாளில் இருந்து, இன்று வரை தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் கழிந்தும் கூட, தமிழக மக்கள் மனதிலே ஒரே நிலையான சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

எல்லா மொழிகளிலும் வருடங்கள் உருண்டோட, சூப்பர்ஸ்டார் பட்டமும் கைமாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அன்றும், இன்றும், என்றும் கோலிவுட்டின் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

பின்புலம் பெரிதல்ல! விரும்பும் துறையில் உச்சத்தை அடைய, பணமோ, உதவியோ, பெரிய பின்புலமோ தேவையில்லை. சரியான அடித்தளமும், விடா முயற்சியும் இருந்தாலே போதுமானது என்பதற்கான ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர் ரஜினிகாந்த். இது, தான் விரும்பும் துறையில் வெற்றியடைய விரும்பும் அனைவருக்கும் பொருந்தும்.

தன்னடக்கமும் கடந்து வந்த பாதையை மறவாத குணமும்! வணிக ரீதியாக ஆசியாவில் இரண்டாவதாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நிலையான சூப்பர்ஸ்டார், தொடர் வெற்றிகள், ஜப்பான், சீனா என உலகளாவிய ரசிகர் பட்டாளம் என தன் உயரம் உயர்ந்துக் கொண்டே போனாலும், தலையில் கனம் உயரவில்லை. இந்த தன்னடக்கம் தான் ரஜினியின் முக்கிய வெற்றி இரகசியம்.

விடாமுயற்சியும் கடின உழைப்பும்! பந்தையத்தில் தோற்காத குதிரையே இல்லை. ஏதேனும் ஒரு கட்டத்தில், தொடர்ந்து வெற்றிப்பெறும் குதிரையும் கூட சறுக்கியது உண்டு. இது ரஜினிக்கும் பொருந்தும். ஆனால், சிலர் தோல்விகளில் துவண்டு போய்விடுவார்கள்.

ஆனால் ரஜினி, ஒரு சோற்று பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தன் பாதையில் ஒரு தோல்வி கண்டாலும், அதை சரி செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு முன்பை விட மிக வலிமையை திரும்பும் தந்திரம் அறிந்தவர் ரஜினி.

இயல்பு மாறாத அணுகுமுறை! தான் கண்டட்க்ட்டராக இருந்த போது, மற்றவரிடம், நண்பர்களிடம், உறவினரிடம் எப்படி நடந்துக் கொண்டாரோ, அப்படியே தான் திரையில் பெரிய நட்சத்திரம் ஆன பிறகும் நடந்துக் கொண்டார்.

என்றும், யாரையும் ஏளனமாய் ஓர் பார்வை கூட பார்த்ததில்லை. அனைத்திற்கும் மேலாக, எளிமை. இந்த எளிமை தான் மற்ற அனைவருக்கும், ரஜினி ஓர் முன்னோடியாக திகழ்வதற்கான காரணம்.

மதிப்பும் நட்பும்! அனைவருடனும் மதிப்பு, நட்புறவாகவும் பழகும் பழக்கம். தன்னை அறிமுகப்படுத்திய கே.பி அவர்கள் மீது இருந்த மரியாதை. தான் இன்று நடிகனாக உயர காரணமாக இருந்த நண்பர்கள்.

நடத்துனராக இருந்த பொது உடன் பணிபுரிந்தவர்கள் என அனவைரையும் இன்றளவும் மறக்காமல் நினைவுகூரும் அந்த குணம் தான் ரஜினியின் வெற்றி இரகசியம்.

ஆன்மிகமும் குடும்பமும்! ஆன்மிகம் ஓர் மனிதனின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும், அமைதியை வழங்கும் என்பதை தன் சுய வாழ்க்கையின் மூலமாக நன்கு உணர்தவர் ரஜினி.

தான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருப்பினும் வேலை மற்றும் குடும்பம் என இரண்டையும் சமநிலையில் கையாண்டு. இரண்டுக்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொண்டவர். 

எவனொருவன் தன் வேலை மற்றும் குடும்பத்தை இரு கண்கள் போல, ஒரே மாதிரி பார்த்துக் கொள்கிறானோ, அவன் அவனது வாழ்வில் பெரிய எல்லைகளை கூட எளிதாய் எட்டிக் கடந்து விடுகிறான்! உச்சம் அடைந்துவிடுகிறான்!!!

No comments :

Post a Comment