காதலில் கபடியாடும் நயன்தாரா: விக்னேஷ் சிவனுக்கும் அல்வா!
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணியில் இருக்கும் நடிகை நயன்தாரா பற்றிய கிசுகிசுக்களுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் நயன்தாரா காதல் விவகாரங்கள் மிகவும் பிரபலமானவை.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த பெருமை கொண்ட நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கை என்பது கொஞ்சம் கசப்பானவை தான்.
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்த போது முதன்முதலாக நடிகர் சிம்புவுடன் காதல் வசப்பட்டார். ஆனால் இந்த காதல் திருமணத்திற்கு முன்னரே சில மாதங்களில் பிரிந்தது.
பின்னர் வில்லு படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் பிரபு தேவா உடன் காதல் வசப்பட்டார். இதன் பின்னர் பிரபு தேவா அவரது மனைவியை விவாகரத்து செய்தார். நடிகை நயன்தாராவும் மதம் மாறி பிரபு தேவாவை திருமணம் செய்ய தயாராக இருந்தார். ஆனால் இந்த காதலும் கடைசி நேரத்தில் திருமணத்துக்கு முன் பிரிந்தது.
அதன் பிறகு கொஞ்ச காலம் காதலில் விழாமல் இருந்த நயன்தாரா நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இந்த காதல் தொடர்பாக விக்னேஷ் சிவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அதை மறுக்கவில்லை. இதனையடுத்து இருவரும் காதலிப்பது உறுதியானது. இந்த காதல் ஜோடி குறித்து அவ்வப்போது பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இந்நிலையில் விக்னேஷ் சிவனுடனான காதலும் தற்போது முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டதாக வரும் தகவல் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன காரணத்திற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பது தெரியவில்லை.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment