இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் சாதனை மேல் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதிக தொடர்கள் வெற்றி:

தோனி தலைமையில், மூன்று மற்றும் மூன்றிற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றுவது மூன்றாவது முறையாகவும். இதன் மூலம் மூன்று முறை முழுமையாக கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

இதற்கு முன்னதாக தோனி தலைமையில், 2008-09 ஆம் ஆண்டுகளில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரையும், அதே இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011-12 ஆண்டுகளிலும் தொடரை முழுமையாக கைப்பற்றி இருந்தது.

அதிக ஒருநாள் போட்டிகள் வெற்றி:

அதேபோல், நேற்றைய போட்டியுடன் தோனி தலைமையிலான இந்திய 107 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்றவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த பட்டியலில் 165 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அதிக நபர்கள் வெளியேற்றம்:

நேற்றைய போட்டியின் 33ஆவது ஓவரில், ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா (0) ஜாஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 350 வீரர்களை வெளியேற செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். 278 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 261 கேட்சுகள் மற்றும் 89 ஸ்டெம்பிட்டுகளை செய்துள்ளார்.

முதல் இடத்தில், இலங்கையின் குமார் சங்ககாரா [404 போட்டிகள், 482 அவுட்டுகள், 383 கேட்சுகள், 99 ஸ்டெம்பிட்டுகள்], இரண்டாவது இடத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் [287 போட்டிகள், 472 அவுட்டுகள், 417 கேட்சுகள், 55 ஸ்டெம்பிட்டுகள்] மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிடிக்காவின் மார்க் பவுச்சர் [295 போட்டிகள், 424 அவுட்டுகள், 402 கேட்சுகள், 22 ஸ்டெம்பிட்டுகள்] உள்ளனர்.

நெருப்புடா! சாதனை மேல் சாதனை படைக்கும் தோனி



இந்திய கிரிக்கெட் அணி இளம் புதிய வீரர்களுடன் கேப்டன் தோனி தலைமையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கேப்டன் தோனி பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் தோனி பவுலிங் பயிற்சி மேற்கொண்டார். அந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளதால் கேப்டன் தோனி இந்த தொடரில் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கேப்டன் தோனி ஏற்கனவே ஒரு நாள் போடிகளில் பந்து வீசி இருக்கிறார். 2 போட்டிகளில் பந்து வீசிய அவர் 36 பந்துகளை வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலராக விஸ்வரூபமெடுக்க இருக்கும் கேப்டன் தோனி!


கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அவரால் சிறப்பாக பந்து வீச்சுக்கு திரும்ப முடியவில்லை என்று பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹாக் கூறினார்.

இதையடுத்து ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாக குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆடும் முயற்சியில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜுனைத் கான் கூறியதாவது:-

இங்கிலாந்து அணியில் விளையாட விருப்பம்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்



இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்து தள்ளியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன்.
இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி, கடந்த இரண்டு வாரங்களாக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ள சால்ட்லேக் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அதில், முத்தையா முரளீதரன் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார். அப்போது அங்கிருந்த இளம் வீரர்கள், முரளீதரனிடம் சில கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார்.

ஒரு வீரர் விராட் கோலியை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முரளீதரன் “ விராட் கோலை பார்ஃம் எனும் கனவின் நடுவில் இருக்கிறார். இந்த ஐ.பி.எல். தொடரில் மட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான வகையில் விளையாடி வருகிறார். இந்தியாவிற்காகவும், ஐ.பி.எல். தொடருக்காகவும் ரன்களை குவித்து வருகிறார். அவரை யாரும் தடுக்க முடியாது. அவரது பார்ஃம் என்னை வியக்க வைக்கிறது” என்று கூறினார்.

விராட் கோலியின் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது : முத்தையா முரளீதரன்

BATNAA Ok Virat kohli Funny Speech

BATNAA Ok Virat kohli Funny Speech


உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஜராரா, பாரிகி கிராமத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் முக்கியமான கட்டத்தில் நடுவர் நோ பால் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பவுலர் அந்த நடுவரின் தங்கையை விஷம் வைத்து கொன்றுள்ளார்.

ஜராரா என்ற கிராமத்தில் இளைஞர்கள் அடிக்கடி கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நடந்ததால் ஜராரா மற்றும் பாரிகி கிராமத்தின் நடுவே அதனை சுற்றியுள்ள இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளனர்.

கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சந்தீப் பால் என்ற நபர் முக்கியமான கட்டத்தின் போது வீசிய பந்து நோபால் என அறிவித்தார் நடுவர் ராஜ்குமார். இதனால் பவுலருக்கும், நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நோ பால் முடிவை திரும்ப பெறாவிட்டால் உன்னுடைய குடும்பத்தில் ஒருவர் உயிரோடு இருக்க மாட்டார் என பவுலர் சந்தீப் பால் மிரட்டல் விட்டார். ஆனால் கிரிக்கெட்டில் ஆக்ரஷமாக இப்படி பேசுவது வழக்கம் தான் என அவரின் மிரட்டலை கண்டுக்காமல் விட்ட நடுவர் ராஜ்குமார் தனது நோ பால் முடிவை மாற்றவில்லை.

இதனால் கோபமடைந்த அந்த பவுலர் மறுநாளே ராஜ்குமாரின் தங்கை பூஜா மற்றும் அவரின் தோழிகள் நடந்து சென்ற போது வழி மறித்து அவர்களிடம் கூல் டிரிங்ஸ் குடிக்குமாறு கூறி ஒரு பானத்தை கொடுத்துள்ளார்.

சந்தீப் பால் ஏற்கனவே பூஜாவுக்கு தெரிந்த நபர் என்பதால் அவரும், தோழிகளும் அந்த கூல் டிரிங்ஸை குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பூஜாவும் அவரின் தோழிகள் மயங்கி விழுந்தனர். இதில் பூஜா உயிரிழந்ததார். தோழிகள் மூன்று பேருக்கும் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நோ பால் கொடுத்ததால் நடுவரின் தங்கைக்கு விஷம் கொடுத்து கொன்ற பவுலர்



இந்திய இளம் நட்சத்திர வீரர் விராட் கோலியை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறான விஷயம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய பிரட் லீ, பிராட்மேனை, சச்சின், ஸ்டீவாக் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதேபோல, சச்சினுடன், விராட் கோலியை ஒப்பிட்டுக்கூடாது என கூறியுள்ளார்.

200 டெஸ்டில் பங்கேற்றுள்ள சச்சின் தான் சந்தேகமே இல்லாமல் நம்பர்-1 வீரர். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலியும் 100 முதல் 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இருப்பார். அப்போது அவர் சச்சின் செய்த சாதனைகளை நெருங்கலாம் அல்லது நெருங்காமலும் போகலாம். காலம் தான் இதற்கான பதிலை சொல்ல வேண்டும் என்றார்.

மேலும் கூறிய பிரட் லீ என்னை பொறுத்தவரையில், வெவ்வேறு தலைமுறை வீரர்களை எப்போதும் ஒப்பிடக்கூடாது என்றார்.

விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது: பிரட் லீ


Namma Thala Dhoni | Dhoni's Dream Was Fullfilled ?



பெண் விளையாட்டு வீராங்கனைகள் நிர்வாகிகளால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய பெண்கள் கால்பந்து கேப்டன் சோனா சவுத்தரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக பணியாற்றியவர் சோனா சவுத்தரி. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், கேம் இன் கேம் என்ற சுயசரிதை புத்தகத்தை சோனா சவுத்தரி எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அவர் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:-

கால்பந்து வீராங்களைகள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுள்ளனர். குறிப்பாக, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். விளையாட்டு அணியில் இடம் பெற அட்ஜஸ் மெண்ட் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்பட்டனர்.

இது சம்பவங்கள் குறித்து பல முறை புகார் தெரிவித்தும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது ஒரு முறை கூட விசாரணை செய்யப்படவில்லை.

ஆனால், இதையும் தாண்டி அவர்கள் தங்களது சாதனையை பதிவு செய்தனர் என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். அவரது இந்த புத்தகம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - சோனா சவுத்தரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்



கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டம்பால் தாக்கி 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேசம் டாக்கா நகரிலுள்ள சிறுவர்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது.

அந்த போட்டியில் பாபுல் ஷைக்தர்(16) ஒரு அணி சார்பில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளான். விளையாட்டின் போது நோ பால் என்று நடுவருடன் பேசிக் கொண்டிருந்த ஷைக்தரை பேட்ஸமேன் ஒருவர் ஆத்திரம் அடைந்து ஸ்டம்பால் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் ஷைக்தர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உடனே அங்கு இருந்த சிறுவர்கள் ஷைக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஷைக்தர் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை செய்த மற்றொரு சிறுவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஸ்டம்பால் தாக்கி கிரிக்கெட் வீரர் கொலை: வங்காளதேசத்தில் நடந்த சோகம்



இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரை பஞ்சாப் அணியின் உரிமையளரான நடிகை பிரீத்தி ஜிந்தா கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை அன்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி மூலம் அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதுவரை ஆடிய 10 போட்டிகளில் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய முடியாது.

இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், ஆந்திரமடைந்த பிரீத்தி ஜிந்தா வேகமாக வந்து பஞ்சாப் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரை ஆங்கிலத்தில் மோசமான கெட்ட வார்த்தையால் திட்டினார்.

வெளிநாட்டு வீரர்கள், இளம் வீரர்கள் முன்னிலையில் பயிற்சியாளரை கெட்ட வார்த்தையால் பிரீத்தி ஜிந்தா திட்டியது, கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் பங்கரை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரீத்தி ஜிந்தா



Why Virat Kohli played cricket match the day after his father's death | Latest Tamil News

Why Virat Kohli played cricket match the day after his father's death | Latest Tamil News


வினோத் காம்ப்ளி மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை விட திறமை மிகுந்தவர் என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பெற்றுத் தந்தவருமான கபில்தேவ் கூறியுள்ளார். இது குறித்து கூறியுள்ள கபில்தேவ், “சச்சின், காம்ப்ளி இருவருமே ஒரே நேரத்தில் சமமான திறமையுடன் கிரிக்கெட்டில் நுழைந்தனர். காம்ப்ளியிடம் நிறைய திறமைகள் இருந்திருக்கலாம். ஆனால், வினோத் காம்ப்ளிக்கு கிடைத்த ஆதரவு அமைப்புகள், வீட்டுச் சூழ்நிலைகள், மேலும் அவருடைய நண்பர்கள் வட்டம் ஆகியவை என்பது சச்சின் பெற்றிருந்ததுடன் ஒப்பிடும்போது முழுக்க வித்தியாசமானது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சச்சின் 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடினார். ஆனால், காம்ப்ளி தனது ஆரம்ப காலத்தில் பெற்ற வெற்றிகளை தக்கவைக்க தவறியதால் சீக்கிரமே காணாமல் போய் விட்டார். திறமை ஒருபுறம் இருந்தாலும், ஒரு விளையாட்டு வீரருக்கு இதை விட இன்னும் அதிகமான விஷயங்கள் தேவையாக இருக்கிறது. நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பள்ளிகள், கல்லூரிகள்.... எல்லாவற்றிலும் இருந்து ஆதரவு தேவை” என்றார்.

வினோத் காம்ப்ளி சச்சினை விட திறமை மிகுந்தவர் - போட்டுடைக்கும் கபில்தேவ்



இந்தியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் கேரள வீரர் ஒருவர், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கேரளாவில் மாவட்ட அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் கன்னூர், மலப்புரம் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய மலப்புரம் அணி முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் எடுத்தது. இதில், 9.4 ஓவர்களை வீசிய நாஜில் 12 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள நாஜில், “நான் கேரளா ஒரு நாள் விளையாட விரும்புகிறேன். இந்த நேரத்தில் நான் எனது மாவட்ட அணிக்காக சிறப்பாக விளையாடியதற்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

கேரளாவில் நடைபெற்றுள்ள உள்ளூர் போட்டிகளில் இதற்கு முன்னதாக 1985-86ஆன் ஆண்டுகளில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் என்.பி.சந்தீப் கண்ணூர் அணிக்காகவும், மொஹமது அஃப்சல் மலப்புரம் அணிக்காகவும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

அதேபோல 2008-09 ஆண்டுகளில் நடைபெற்ற பெண்களுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் ஜின்ஸி ஜார்ஜ் 56 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நிகழ்வு இருமுறை நடந்துள்ளது.

1956ல் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 53 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளும், டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழல் வீரர் கும்ப்ளே 74 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

12 ரன்களுக்கு 10 விக்கெட் : இளம் இந்திய வீரர் நாஜில் அபார சாதனை



கிரிக்கெட் உலகில் அதிகபட்ச சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய ஜாம்பாவான் சாசின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் முறியடிக்க காத்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் அரங்கில் தனது 10000 ரன் மைல் கல்லை தனது 32 வயதில் கடந்து சாதனை புரிந்தார். இந்த சாதனையை 31 வயதில் கடந்து சாதனை புரிய அலாஸ்டர் குக்-க்கு இன்னும் 36 ரன்களே தேவைப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் குக் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குக் 10000 ரன்கள் மைல்கல்லை தாண்டினால் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய சச்சினின் சாதனையை அவர் முறிடிப்பார்.

மேலும் டெஸ்டில் 10000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 12 வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அலாஸ்டர் குக்



மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி அட்டக்காரர் கிறிஸ் கெய்ல். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகை ஆரோஹி என்பவர் கெயிலுக்கு டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அதில் நான் உன்னுடன் ஒருநாள் டேட்டிங் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார். சமீபகாலங்களில் சர்ச்சையில் சிக்கிய கெய்ல் சாமர்த்தியமாக அந்த பெண்ணுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியபோது அப்படி என்றால் செலவுகளை நீங்கள் ஏற்றால் நான் ரெடி என்று கூறியுள்ளார்.

கிறிஸ் கெயிலுக்கு அதிக ரசிகர்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னுடன் டேட்டிங் போகனும்: டுவிட்டரில் கேட்ட ரசிகைக்கு கெய்ல் என்ன சொன்னார் தெரியுமா?



இந்த 11 வயது சிறுமியை துன்புறுத்திய வழக்கில், தான் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்குமாறு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹொசைன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்களாதேஷின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான, ஷஹாதத் ஹொசைன் [29]. இவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்த ஒரு சிறுமியை, சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது.

இந்த 11 வயது சிறுமி உடலில் பல காயங்கள் மற்றும் கால் முறிந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், இவர்கள் இருவரும் தலைமறைவாயினர். பின்னர், ஷஹாதத் ஹொசைன் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

மேலும், அவர் கோரியிருந்த ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஷஹாதத் ஹொசைனை இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், தான் தவறு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரி வங்கதேச கிரிக்கெட் சங்கத்திடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ”நான் செய்த அந்த விரும்பத்தகாத செயலுக்காக மிகவும் வருந்துகிறேன், இதற்காக ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தவறைத் திருத்திக் கொள்வதற்கும் மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷஹாதத் ஹொசைன் 72 விக்கெட்டுகளையும், 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 47 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

’என்னை மன்னித்து விடுங்கள்’ - சிறுமியை சித்ரவதை செய்த கிரிக்கெட் வீரர்


IPL T20 2016: GL beat RPS by 3 wickets

IPL T20 2016: GL beat RPS by 3 wickets