விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது: பிரட் லீ

Share this :
No comments


இந்திய இளம் நட்சத்திர வீரர் விராட் கோலியை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறான விஷயம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய பிரட் லீ, பிராட்மேனை, சச்சின், ஸ்டீவாக் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதேபோல, சச்சினுடன், விராட் கோலியை ஒப்பிட்டுக்கூடாது என கூறியுள்ளார்.

200 டெஸ்டில் பங்கேற்றுள்ள சச்சின் தான் சந்தேகமே இல்லாமல் நம்பர்-1 வீரர். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலியும் 100 முதல் 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இருப்பார். அப்போது அவர் சச்சின் செய்த சாதனைகளை நெருங்கலாம் அல்லது நெருங்காமலும் போகலாம். காலம் தான் இதற்கான பதிலை சொல்ல வேண்டும் என்றார்.

மேலும் கூறிய பிரட் லீ என்னை பொறுத்தவரையில், வெவ்வேறு தலைமுறை வீரர்களை எப்போதும் ஒப்பிடக்கூடாது என்றார்.

No comments :

Post a Comment