காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த முதியவரை போலீஸார் ஷூ துடைக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தனது செல்போன் திருடுபோனது குறித்து புகார் அளிக்க முதியவர் ஒருவர் புகார் அளிக்க அங்குள்ள காவல் நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த போலீஸார் தங்களது ஷூவுக்கு பாலீஸ் போட்டால்தான் உங்களது புகாரை ஏற்றுக்கொள்வோம் என்று கூறினர். இதையடுத்து அந்த முதியவர் போலீஸாரின் ஷூகளுக்கு பாலீஸ் போட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து முசாபர்நகர் எஸ்.பி. சந்தோஷ் குமார் கூறுகையில், காலணிகளுக்கு பாலிஷ் போட வைத்தது குறித்து எங்கள் கவனத்திற்கு வந்ததை அடுத்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments :
Post a Comment