பரதன் படத்துக்காக மொட்டை போடும் விஜய்...?

Share this :
No comments


பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் என கூறப்படுகிறது.

இதில் ஒரு வேடத்தில் மொட்டைத் தலையுடன் அவர் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

விஜய்யின் 60 -வது படமான இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. பரதனின் முந்தைய படமான அழகிய தமிழ் மகனில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல் இந்தப் படத்திலும் இரண்டு வேடங்கள், ஒரு வேடத்தில் மொட்டை தலையுடன் தோன்றுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர். தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.

No comments :

Post a Comment