தேர்தல் தோல்விக்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும்: இளங்கோவன்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 134 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
திமுக கூட்டணியில் சேர்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியால் தான் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது என பரவலாக பேசப்பட்டுது.
இந்நிலையில் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்ததற்கு, திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவனிடம், சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்ததற்கு திமுகவினர் அவர்களுடன் இணைந்து பணியாற்றாததும் காரணமாக இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது பற்றி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இளங்கோவன், தேர்தலில் தோல்வி அடையும் போது பல்வேறு விதமான விமர்சனங்கள் வரும். இதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது சரியாக இருக்காது. தேர்தல் தோல்விக்கு இரண்டு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment