மநகூ இருந்து திருமாவளவன் வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு!

Share this :
No comments


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்விய மக்கள் நல கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும் என கூறியிருந்தது.

ஆனால் இந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த கூட்டணியில் விரைவில் வெளியேறுவார் என கூறப்படுகிறது.

இனிமேல் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்கப்போவது இல்லை என திருமாவளன் முடிவுக்கு வந்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த தேர்தலில் கூட்டணி தோற்றதற்கு அவர்கள் கூறிய முக்கிய காரணம் வைகோ. வைகோ அதிமுகவின் பி டீம் போல் செயல்பட்டார் எனவும் அதனை மறுத்து சரியான விளக்கமும் அவர் அளிக்க வில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டரத்தில் பேசப்படுகிறது.

மேலும் விஜயகாந்தின் செயல்பாடுகளும் இந்த தேர்தலில் முக்கிய காராணமாக கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறுவார் என கூறும் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது எனவும், வருகிற பாராளுமன்ற தேர்தலை அவர்கள் குறிவைத்துள்ளதாக கூறுகின்றனர். அதற்காக காங்கிரஸ் கட்சியுடன் அவர்கள் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக விசிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

No comments :

Post a Comment