பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை என்று கூறிய பாகிஸ்தானுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானையே தாக்கும் இந்தியாவுக்கு உள்ளது என்று இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்தி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை நின்னைவு படுத்தும் விதமாக இஸ்லாமாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் கான் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் 1984ஆம் ஆண்டே அணு வல்லமை பெற்றிருக்கும் ஆனால் அப்போது இருந்த தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத நாடாக மாறியதற்கு எனது பணிகளே காரணம். தற்போது பாகிஸ்தானின் டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் அளவிற்கு வல்லமை பெற்றுள்ளது, என்றார்.
பாகிஸ்தான் அணு விஞ்ஞானியின் இத்தகைய பேச்சுக்கு முன்னால் ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால், முன்னால் கடற்படை அதிகாரி மன்மோகன் பகதூர், முன்னால் விமானப்படை அதிகாரி உதய்பாஸ்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியா ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையே தாக்கும் வல்லமை பெற்றது என்றும், அணு ஏவுகணைகள் போர் கருவி அல்ல போர் தடுக்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை என்றும் கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment