திமுகவின் உதவி தேவைப்படுகிறது: பாஜக மத்திய அமைச்சர்

Share this :
No comments


நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனின் கோரிக்கையை மூன்று மாதத்தில் நிறைவேற்றப்படும் என பாஜக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று அதன் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ராஜன் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏடிஎம் வசதி செய்து கொடுக்க வேண்டும், பள்ளிவிளை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதனையடுத்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்த தொகுதி மட்டும் அல்ல மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் சுரேஷ் ராஜன் மற்றும் அவரை சேர்ந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் ஒத்துழைத்தால் தான் மாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியும். சுரேஷ் ராஜன் தற்போது முன்வைத்த கோரிக்கைகள் 3 மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றார்.

No comments :

Post a Comment