"அம்மா வாழ்கன்னு" சொன்னா டிரான்ஸ்பரா? இது என்னடா தமிழ்நாட்டில கொடுமை

Share this :
No comments


முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி டிஜிட்டல் பேனர் வைத்த முத்துப்பேட்டை எஸ்ஐ பணிமாற்றம் செய்யப்பட்டார்.

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவி.
இவரது சொந்த ஊர் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ஆகும்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை பாராட்டி, ஜெயலலிதா படத்துடன், தனது படத்தையும் போட்டு, தனது ஊரில் உள்ள கடை வீதியில் பிளக்ஸ் போர்டு வைத்தார் எஸ்ஐ ரவி. இந்த தகவல் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிலும் மின்னல் வேகத்தில் பரவியது.

இது குறித்து எஸ்ஐ ரவி விளக்கம் அளிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது, இந்த பேனரை, தான் வைக்கவில்லை என்றும், தனது நண்பர்கள் வைத்துள்ளதாகவும் விளக்கம் கொடுத்தார். ஆனால், அதில் உள்ள வாசகங்களை தானே எழுதியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனால், எஸ்ஐ ரவியை ஆயுதப் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். மேலும், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

டெயில் பீஸ்: திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக பதவியேற்றபோதும் அவரை வாழ்த்தி இந்த போலீஸ் அதிகாரி ரவி டிஜிட்டல் பேனர் வைத்துள்ளாராம். இப்ப தெரியுதா டிரான்ஸ்பருக்கு காரணம். அட தேவுடா......!

No comments :

Post a Comment