ஆவாஹனம் என்றால் அழைத்தல், அமர வைத்தல் என்று பொருள்படும். நித்திய பூஜையில் முக்கியமானது
ஆவாஹனம் என்றால் அழைத்தல், அமர வைத்தல் என்று பொருள்படும். தந்திர யோகம் செய்யும் ஒவ்வொருவரும், இம்முத்திரை செய்வர். அதே போல் நித்திய பூஜையில் முக்கியமானது. இறைவனை அழைத்து, ஆசனத்தில் அமர வைக்கும் சடங்காக இம்முத்திரை காட்டப்படுகிறது.
குறிப்பாக 24 முத்திரைகள் நித்திய பூஜையின்போது காட்டப்படும். அதில் ஒன்று இது. இம்முத்திரை பூஜைக்கு மட்டுமன்று, உடற்குறைகளை போக்கவும் இது பயன்படுகிறது.
பஞ்ச பூதங்களில், காற்றையும், நெருப்பையும் இம்முத்திரை கட்டுப்படுத்துவதால், வயிறு, சுவாசம் சீராகிறது.
அது சம்பந்தமான நோய்களும் தீர்ந்து விடுகின்றன. செரிமாணம் நன்கு நடைபெறுவதால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கின்றன.
இதனால் மூலாதார சக்கரம் தூண்டப்பட்டு சக்தி உற்பத்தியாகி, பொறாமை, கோபம் போன்ற உணர்ச்சிகளையும், வாத, பித்த, கப நாடிகளை சமன்படுத்தி, பத்து வகை வாயுக்களில், அபான, சமான, வியான என்ற பிராண வாயுக்களையும், கட்டுப்படுத்துகிறது.
செய்முறை :
கைகளை, சுண்டு விரல்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் படி வைத்து, உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும் படியும், கட்டைவிரல் மோதிர விரலின் அடிபாகத்தில் படும்படியும் வைக்கவேண்டும். இவ்வாறு 5 முதல் 15 நிமிடம் செய்ய வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.
No comments :
Post a Comment