ஆரோக்கியத்தை காப்பதற்காக நம்மில் பலர் இந்த உணவு நல்லது, இது தீயது என பார்த்து பார்த்து சாப்பிடுவோம். பல நேரங்களில் நாம் உண்ணும் உணவுகள் சிலவற்றை நல்லவை என நினைத்துக் கொண்டிருப்போம், சில உணவுகளை தீயவை என்று நினைப்போம். ஆனால் உங்கள் எண்ணங்கள் தவறானவை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முழு கோதுமை : நாம் சுத்தகரிக்கப்பட்ட ரிஃபைண்டு கோதுமை மாவு உடலுக்கு நல்லதல்ல என நினைத்து,அதனை கொண்டு தயாரிக்கும் உணவுப் பொருட்களை வாங்க மாட்டோம்.ஏன் பிரட் வகைகளை கூட சாப்பிடாமல் இருப்போம்.
ஆனால் அது தவறு. சுத்தகரிக்கப்படாத முழுமையான கோதுமையில்தான் குளுடன் என்ற பொருள் உள்ளது. அது உடலுக்கு நல்லதல்ல. குடலில் ஒட்டிக் கொண்டு பிரச்சனைகளை உருவாக்கும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும். விட்டமின் டி உடலுக்குள் உறியப்படுவதை தடுக்கும்.
எனர்ஜி ட்ரிங்க் : விளம்பரங்களில் வரும் குளுகோஸ் கலந்த எனர்ஜி ட்ரிங்க் பலரும் உடலுக்கு நல்லது என குடிப்பார்கள். இது மிகவும் தவறு. பொதுவாக விளையாட்டு வீர்களுக்குதான் இந்த மாதிரியான பானங்கள் தேவை. ஏனெனில் நாள் முழுவதும் கடுமையான பயிற்சி செய்து, நிறைய வியர்வை பெருக்கெடுக்கும் சூழலில், உடலுக்கு தேவையான சக்தியும், நீர்சத்தும் இழக்க நேரிடும்.
அந்த மாதிரி நேரத்தில், அவர்களுக்குதான் இந்த மாதிரியான எனர்ஜி பானங்கள் தேவை. சாதரணமாக ரொட்டீன் வேலை செய்பவர்கள் சும்மா களைப்பாக இருக்கிறதே என இந்த பானங்களை குடித்தால், உடலில் ஆபத்தை விளைவிக்கும்.
ஏனெனில் இந்த பானங்களில், தேவையான அளவு, குளுகோஸ், எலக்ட்ரோலைட் மற்றும் நீர் உள்ளது. நம் உடலில் தேவைக்கு அதிகமான எலக்ட்ரோலை இருந்தால் உடலின் அமில காரத் தன்மை சமன் இல்லாமல், ஆபத்தை உருவாக்கும்.
வாழைப்பழ சிப்ஸ் : சிலர் உடல் எடை கூடும் என நினைத்து உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட மாட்டார்கள் அதற்கு பதிலாக வாழைப்பழ சிப்ஸ் சாப்பிடுவார்கள். இது சரியான கருத்து இல்லை. உருளைக் கிழங்கானாலும் சரி, வாழைப்பழமானாலும் சரி, எண்ணெயில் பொரித்தால் எதுவுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்லை.
சாலட் : நீங்கள் ஹோட்டல் செல்கிறீர்கள். உங்கள் இரவு உணவு முடிந்ததும் ஒரு கப் சாலட் வாங்கி சாப்பிடுகிறீர்கள். இது மிகவும் நல்லது, நார்சத்து நிறைந்தது என திருப்தியுடன் திரும்புகிறீர்கள்.
ஆனால் நீங்கள் நினைப்பது போல எல்லா சலட்களும் ஆரோக்கியமானது என்றில்லை. நாம் வீட்டில் செயும் சாலட்களுக்கும் கடைகளில் வாங்கு சாலட்டிற்கும் வித்யாசங்கள் நிறைய உள்ளன.
நல்ல மணம் வர வேண்டுமென நினைத்து அவர்கள் போடும் சில காய்கள் அல்லது பழங்கள் அதிக கலோரிகளை கொண்டிருக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர்கள் தரும் சலட்டில் நிறைய வித்யாசமான பழங்களோ காய்களோ இருக்கும்.
அவற்றை நீங்கள் சாதரண காய்கறி கடைகளில் பாத்திருக்க முடியாது. அவைகள் எல்லாம், நீங்கள் சாப்பிடும் ஜங்க் உணவுகளை விட அதிக கலோரிகளைக் கொண்டுள்ள காய்கறிகள்தான் .
ஆகவே வீட்டில் செய்யும் பழ அல்லது வெஜிடேபிள் சாலட் சிறந்தது. சிலவற்றை நல்ல உணவுகள் என்று இந்த சமூகத்தில் வணிக நோக்கோடு உருவகம் கொடுத்திருப்பார்கள். நம்புங்கள் அவை பொய்யான விளக்கங்கள். எதையும் கண்மூடித் தனமாக நம்புவதற்கு முன் ஆராயுங்கள்.
No comments :
Post a Comment