சங்கராசார்யா சாமியாரின் ரூ:1.35 கோடி சொகுசு பஸ்சிற்கு வரிவிலக்கு

Share this :
No comments


மத்திய பிரதேசத்தில் சங்கராசார்யா சாமியாரின் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பஸ்சிற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சங்கராசார்யா சாமியாருக்கு 1.35 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பஸ் ஒன்று உள்ளது. இந்த வாகனம் சங்கராசார்யா ஜோதிஷ்பீதா, ஸ்வாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சிற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில போக்குவரத்துத்துறை மந்திரி பூபேந்திர சிங் கேபினட்டுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் சங்கராசார்யா சாமியார் பஸ்சிற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

1.35 கோடி ரூபாய் மதிப்பிலான காருக்கு சுமார் 11 லடசம் ரூபாய் சாலை வரி கட்ட வேண்டும். ஆனால் சாமியாருக்கு மத்திய பிரதேச அரசு 11 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது மத்தியில் ஆளும் அரசின் மத சார்பை சுட்டி காட்டியுள்ளது.

No comments :

Post a Comment