குரங்கால் 4 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்த மக்கள்

Share this :
No comments


கென்யாவில் குரங்கு ஒன்று மின்மாற்றி மீது விழுந்ததால் 4 மணி நேரம் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டது.

கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையம் கிழக்கு ஆப்ரிக்காவில் பெரிய நீர்மின்சார நிலையம் ஆகும். இது அந்நாட்டில் மின் விநியோகம் செய்வதில் மிக முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது குரங்கு ஒன்று விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்து 180 மெகாவாட் அளவிலான மின்சாரம் விநியோகிப்பது தடைபட்டது. இதனால் கென்யாவில் தொழில் துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமாக குரங்கு அதிர்ஷ்டவசமாக பிழைத்துகொண்டது.

இச்சம்பவம் குறித்து ஜிடரு புனல் மின்சார நிறுவனத்தின் பொதுமேலாளர் கென்ஜென் கூறியதாவது:-

ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது குரங்கு விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. 4 மணி நேரத்தில் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் வைல்ட் லைஃப் சேவை மையத்தில் அந்தக் குரங்கு ஒப்படைக்கப்பட்டது, என்றார்.

No comments :

Post a Comment