ஜெய், அஞ்சலியின் பேய் கூட்டணி
எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் - அஞ்சலியின் காதல் கெமிஸ்ட்ரியை யாராலும் மறக்க முடியாது.
இருவரும் உண்மையாகவே காதலிக்கின்றனர் என்று வதந்தி கிளம்பும் அளவுக்கு நிஜ காதலர்களைப் போலவே நடித்திருந்தனர். இந்த ஜோடி பேய் படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகிறது.
அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த பேய் படத்தில் ஜெய்யுடன், அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரமும் உள்ளது. அஞ்சலி ஐடி துறையில் வேலை பார்ப்பவராக வருகிறார்.
படத்தின் ஹைலைட் ஜெய், அஞ்சலி உள்பட படத்தில் வரும் அனைவருமே கோஸ்ட்கள். அதாவது பேய்கள். ஜுலை 6 -ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment