சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார்; தப்பிக்க முடியாது: சொல்வது யார் தெரியுமா?

Share this :
No comments


தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தீர்ப்பு தொடர்பான பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கடந்த முறை முதல்வராக இருந்த போது கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.

இதனையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை ஆனார் ஜெயலலிதா. இவரது விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பிலும், திமுகவின் அன்பழகன் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்.

வழக்கமாக ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசும் இளங்கோவன், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போனாலும் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதி என்றார். என்ன முயற்சி எடுத்தாலும், வழக்கில் தண்டனை பெறாமல் தப்பிக்க முடியாது எனவும் கூறினார் இளங்கோவன்.

No comments :

Post a Comment