ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

Share this :
No comments


ஜூலை 11ஆம் தேதி முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய போவதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.

ஊதியக்குழு பரிந்துரை உட்பட 36 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீலை 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடுவு செயப்பட்டுள்ளதாக என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ரயில்வே துறையில் உள்ள 4 லட்சம் காலி பணியிடங்களை நிறப்ப வேண்டும். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ: 26 ஆயிரம் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் இந்த 36 கோரிக்கைகளில் அடங்கும்.

ஜூன் 9ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கான அறிவிக்கை வழங்கப்படும், என்றார். மேலும் இந்தப் போராட்டத்தில் வங்கிகள் தவிர மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களும் ஈடுப்பட உள்ளனர் என்று தெரிவித்தார்.

No comments :

Post a Comment