புதுச்சேரியில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் சேர்ந்து நாராயணசாமி அரசை கவிழ்க்க சதி

Share this :
No comments


புதுச்சேரியில் நாரயணசாமி தலைமையிலான காங்கிரஸ், திமுக கூட்டணி சமீபத்தில் ஆட்சியமைத்தது. இந்நிலையில் நாரயணசாமி அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர் ரங்கசாமி முயற்சி மேற்கொண்டு வருவது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக கூட்டணி 17 இடங்களிலும், என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ரங்கசாமியிடம் கூறியுள்ளனர். மீண்டும் அதிமுக உடன் இணைந்து செயல்பட கட்சியினர் வலியுறுத்துவதால் ரங்கசாமி அதிமுக உறவுக்கு ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க கோகுலகிருஷ்ணன் மூலமாக கடிதம் அனுப்பி ஜெயலலிதாவின் பதிலுக்காக கத்திருக்கிறார் ரங்கசாமி.

ஜெயலலிதாவிடம் இருந்து ஓரிரு நாட்களில் அழைப்பு வரும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இணையும் படசத்தில் இவர்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகும். மேலும் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சர் ஆனதால் அவர் மீது ஏகத்துக்கும் கடுப்பாக உள்ளனர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.

இவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தி, அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்.களின் ஆதரவுடன், அதிமுக ஆதரவையும் பெற்று ரங்கசாமி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments :

Post a Comment