சென்னையில் சுனாமி பீதி: பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது

Share this :
No comments


சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் சுனாமி பீதியில் உறைந்துள்ளனர். வீடுகளையும், பொருட்களையும் இழந்து மக்கள் வீதியில் தங்கியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள தேவாலயமும் இதில் சேதமடைந்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இந்நிலையில் மிக உயரமாக எழுந்த கடல் அலைகள் மின்னல் வேகத்தில் ஊருக்குள் புகுந்தது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் வீடுகள் கடலுக்கு அருகாமையிலே இருக்கும்.

கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில் அங்குள்ள குடிசை வீடுகளும், பொருட்களும் கடலுக்குள் இழுந்து செல்லப்பட்டன, கடல் நீர் மெல்ல மெல்ல அதிகரித்து சுனாமி போல் ஊருக்குள் புகுந்ததால் அங்குள்ள மக்கள் சுனாமி பீதியில் உள்ளனர்.

கடல் அலைகள் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள தேவாலயமும் சேதமடைந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தேவலாயத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிரியார் ஜெரால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடல் சீற்றம் தொடர்ந்து இருப்பதால் அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து கடல் சீற்றம் இருப்பதால் மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே கணப்படுகிறது.

No comments :

Post a Comment