இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ

தேங்காய் - 1 1/2 கப் (துருவியது)

உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துருவிக் கொண்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

பின் அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதற்குள் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

பின்பு புட்டு குழலை எடுத்துக் கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என குழலை நிரப்ப வேண்டும். பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி!!!

மரவள்ளிக் கிழங்கு புட்டு


சத்தான தர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி, - பெரிய துண்டு

கிர்ணிப் பழம் - பெரிய துண்டு

ஆரஞ்சுபழச்சாறு - அரை கப்,

பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்,

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,

செலரி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை டீஸ்பூன்,

தேன் - ஒரு டீஸ்பூன்,

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

உப்பு சிறிதளவு.

செய்முறை :

* தர்பூசணி, கிர்ணிப்பழங்களை ஸ்கூப்பர் மூலம் (Scoop) எடுத்துக்கொள்ளவும்.

* ஒரு பெரிய கப்பில் ஸ்கூப் பண்ணிய தர்பூசணி, கிர்ணிப்பழத்தை வைக்கவும்.

* மற்றொரு கப்பில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, செலரி, பிளாக் சால்ட், மிளகுத்தூள், தேன், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து, ஸ்கூப் செய்த பழங்களின் மேல் ஊற்றி குலுக்கவும்.

* சிறிய கப்களில் போட்டுப் பரிமாறவும்.

தர்பூசணி கிர்ணிப் பழம் சாலட் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1/4 கப்

குடைமிளகாய் – 1/4 கப்

பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

சோள மாவு – 1 டேபிள்

ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

சீசுவான் சாஸ் செய்வதற்கு…

வரமிளகாய் – 30

பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சீசுவான் சாஸ் செய்யும் முறை:

முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்யும் முறை:

முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். 

பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின், அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்ன்துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பேபி கார்ன் ரெடி!!!

சீசுவான் சில்லி பேபி கார்ன்


நீங்கள் சைவ பிரியரா? உங்களுக்கு வித்தியாசமான சுவையிலான சைவ உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை சமைத்து சுவையுங்கள்.

இது உண்மையிலேயே வித்தியாசமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 2

கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், ஒரு சப்பத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள பேஸ்ட்டைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதுப்போன்று அனைத்து சப்பாத்தியையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி ரெடி!!!



வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி


என்னென்ன தேவை?

எண்ணெய் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 1

பூண்டு – 4

செலரி – 3

கேரட் – 1

குடைமிளகாய் – 1/2

பீன்ஸ் – 5

முட்டைக்கோஸ் – 3 கப்

ஊதா முட்டைக்கோஸ் – 3

ஆரிகனோ – 1 டீஸ்பூன்

தக்காளி பியூரி – 2 கப்

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – தேவையான அளவு

காய்கறி பங்கு அல்லது தண்ணீர்- 5 முதல் 6 கப்

சோளமாவு – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 1/4 கப்

எப்படிச் செய்வது?

உங்கள் காய்கறிகள் அனைத்தையும் எடுத்து நன்றாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடான பின் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும், பிறகு காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு வேகும் வரை அதாவது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இப்போது தக்காளி பியூரி, ஆரிகனோ சேர்த்து 20-25 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு, மிளகு தூள் சேர்க்கவும். 

ஒரு கிண்ணத்தில் சோள மாவு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அவற்றில் ஊற்றவும். ஆரோக்கியமான முட்டைக்கோஸ் சூப் தயார்.

முட்டைக்கோஸ் சூப்


கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரையை வைத்து எப்படி புலாவ் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிறுகீரை - 1 கட்டு,

ப.மிளகாய் - 4

உப்பு - தேவைக்கேற்ப,

மஞ்சள் தூள், - 1/4 டீஸ்பூன்,

பட்டை - லவங்கம் - 2,

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்,

அரிசி - 11/2 ஆழாக்கு,

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் சூடேற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் கீரை சேர்த்து வதக்கி பின் உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

* விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கீரை புலாவ் ரெடி.

* எந்த கீரையிலும் இந்த புலாவை செய்யலாம். சுவையாக இருக்கும்.

சுவையான சத்தான சிறுகீரை புலாவ்


உருளைக்கிழங்கு அனைவருக்குமே பிடித்த ஓர் காய்கறி. அத்தகைய உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் இங்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது மதுரை உருளைக்கிழங்கு மசியலின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது)

எண்ணெய் - 1/4 கப்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

பூண்டு - 6 பற்கள்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பிறகு கடலை மாவு சேர்த்து 5-8 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கினால், மதுரை உருளைக்கிழங்கு மசியல் ரெடி!!!



மதுரை உருளைக்கிழங்கு மசியல்


கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. இப்போது கீரை கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு - 4,

பசலைக் கீரை - 1 கட்டு,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி - 1 துண்டு,

பூண்டு - 2 பல்,

சீஸ் (துருவியது) - அரை கப்,

பிரெட் ஸ்லைஸ் - கால் கப்,

பிரெட் தூள் - தேவையான அளவு,

எலுமிச்சம்பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,

கார்ன்ஃப்ளார் - கால் கப்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

* உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளுங்கள்.

* இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின் அதில் கீரையை போட்டு தண்ணீர் வற்றும் வரை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* வதக்கிய கீரை ஆறியவுடன் அதை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* இந்த விழுதை, மசித்த கிழங்குடன் சேர்த்து அத்துடன் உதிர்த்த பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, துருவிய சீஸ் சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

* ஒரு கிண்ணத்தில் கார்ன்ஃப்ளார் மாவை நீர்க்கக் கரைத்து கொள்ளுங்கள்.

* உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, வேண்டிய வடிவத்தில் கட்லெட் செய்து, கார்ன்ஃபிளார் மாவில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

* தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள கீரை கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கீரை கட்லெட் ரெடி.

* பசலைக் கீரைக்கு பதிலாக, புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றையும் பாதி, பாதி எடுத்து, அரைத்தும் இந்த கட்லெட்டை செய்யலாம்.

குறிப்பு :

கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும். தெளிவான கண்பார்வைக்கும் உதவும்.

சுவையான சத்தான கீரை கட்லெட்



Beetroot Salad



Easy Cheesy Balls with vahchef


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொள்ளு - கம்பு புட்டை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கம்பு - ஒரு கப்

கொள்ளு - கால் கப்

சுக்கு - 2

செய்முறை :

* கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடம் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

* பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்

* மாவை புட்டு குழலில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான கம்பு புட்டு தயார்.

* இதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு - கம்பு புட்டு


தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)

இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

மாவிற்கு…

மைதா – 1 1/2 கப்

முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கோட்டிங்கிற்கு…

பிரட் தூள் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 

இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

கேஎஃப்சி சிக்கன் (KFC CHICKEN) Recipes




Tirunelveli Gothumai Halwa Recipe in Tamil

Tirunelveli Gothumai Halwa Recipe in Tamil


சுவையான கோவைக்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோவைக்காய் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

புளி - நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம் - 10

பெருங்காயதூள் - 1/4 சிட்டிகை

நல்லெண்ணெய் - 50 மில்லி

கடுகு, உப்பு, கறிவேப்பிலை (தாளிக்க)

செய்முறை :

* கோவைக்காயை பொடியாக நறுக்கி இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேக வைத்து ஆற வைக்கவும்.

* ஆறிய கோவையுடன் புளியை சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அதையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

* வாணலியில் கடுகு, பெருங்காயதூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்த இரு கலவைகளையும் கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறி சட்னி பதம் வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* கோவைக்காய் சட்னி சட்னி தயார்!

கோவைக்காய் சட்னி செய்முறை விளக்கம்




பால்கோவான்னா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. 

அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா.......

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப்

பால் பவுடர் - 1/4 கப்

கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை.)

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 - 6 நிமிடங்கள் வைக்கவும்.

இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.

6 அல்லது 7 நிமிடங்களில்...சூடான...சுவையான... பால்கோவா தயார்..!!

சமையல்:இன்ஸ்டண்ட் பால் கோவா


இரவில் சப்பாத்திக்கு பன்னீர் கொண்டு ஏதாவது கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பன்னீர் குருமாவை செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த பன்னீர் குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 3/4 கப்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 3 டீஸ்பூன்

பட்டை - 1/4 இன்ச்

கிராம்பு - 2 பிரியாணி இலை - 1

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1/2 கப்

முந்திரி - 8 கசகசா - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1/2 இன்ச் பூண்டு - 5

செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!

சிம்பிளான... பன்னீர் குருமா


இட்லி, தோசைக்கு சுவையான மிளகு காரச் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 5 (பெரியது)

காய்ந்த மிளகாய் - 4

மிளகு - 1 தேக்கரண்டி

பெருங்காய தூள் - சிறிதளவு

நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி

கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

* தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

* அடுத்து அதில் மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

* வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காய துள் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

* சுவையான மிளகு கார சட்னி தயார்.

* இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மிளகு காரச் சட்னி செய்முறை விளக்கம்



இரவில் சப்பாத்திக்கு பன்னீர் கொண்டு ஏதாவது கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பன்னீர் குருமாவை செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த பன்னீர் குருமாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பன்னீர் - 3/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 3 டீஸ்பூன் பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 பிரியாணி இலை - 1 அரைப்பதற்கு... துருவிய தேங்காய் - 1/2 கப் முந்திரி - 8 கசகசா - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1/2 இன்ச் பூண்டு - 5 செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!

சிம்பிளான... பன்னீர் குருமா




வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....!

தேவையான பொருட்கள்:

மசாலா அரைத்துக்கொள்ள:

வெங்காயம் - 2

பேல் பூரி - 1

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 5

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.

* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.

* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

சமையல்:காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா