கண்ட உணவுகளை தின்று உடல் கன்னா பின்னாவென்று பருமனாகி விட்டதா? அல்லது குழந்தை பிறந்தவுடன் உடல் பருமனாகி இளைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? அப்படியென்றால் இந்த பானங்களை முயற்சி செய்து பாருங்கள்.
உடலில் கொழுப்பினை கரைத்து உங்களை ஸ்லிம்மாக வைக்கும். ருசியை பார்க்காமல் இந்த பானங்களில் உள்ள நன்மைகளை மட்டும் பார்த்து குடியுங்கள். சீக்கிரம் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவீர்கள்.
அவகோடோ, வெள்ளரி பானம் : இந்த ஜூஸ் பசியினை குறைக்கும். அதிக நேரம் எனர்ஜியை தரும். நீர்சத்தினை அதிகரிக்கச் செய்யும். இதனால் கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும்.
தேவையானவை :
அவகோடோ -1
வெள்ளரிக்காய் -1
ஆளி விதை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
அவகடோவின் சதைப் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வெள்ளரிக்காய், ஆளி விதை ஆகியவற்றை கலந்து சிறி து நீர் சேர்ட்து, மிக்ஸியியோ அரைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும்.
குளிர்ந்தவுடன் ஓரிரு ஐஸ்கட்டிகளை போட்டு குடிக்கவும். இந்த பானத்தில், விட்டமின்களும், பீட்டா கரோட்டினும் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் நச்சுக்களை வெளியேற்றும். இதயத்தின் செயல்களுக்கு பலம் அளிக்கும்.
இளைக்க வைக்கும் பானம் : இந்த பானம் தினமும் குடித்து வந்தால் , உடல் பருமன் குறைவதை நன்றாக காணலாம்.
தேவையானவை :
வெள்ளரிக்காய் - 1
எலுமிச்சை சாறு -அரை மூடி
பச்சை திராட்சை - ஒரு கப்
புதினா இலை - ஒரு கைப்பிடி
மிளகுப் பொடி - தூவ வெள்ளரிக்காயை தோல் நீக்கி, திராட்சையுடன் அரைத்துக் கொள்ளுங்கள்.அதனுடன் புதினா இலையையும், எலிமிச்சை சாற்றினையும் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றுங்கள்.
பின்னர் அதில் மிளகுத் தூளை தூவி, அதில் ஐஸ்கட்டிகளை சேர்த்து குடியுங்கள். இந்த பானத்தில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்டும் உள்ளதால், நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கொழுப்பினையும் கரைக்க உதவுகிறது.
இஞ்சி பானம் : இஞ்சியை சிறிதளவு எடுத்து தட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் லேசாக நீரினை சூடுபடுத்தவும். கொதிக்க விட வேண்டாம்.
அதில் தட்டிய இஞ்சி, எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தேன் கலந்து , இளஞ்சூட்டிலேயே குடியுங்கள். இது குடல்களில் படியும் கொழுப்பினை கரைக்கிறது. வயிற்றினை சுத்தப்படுத்துகிறது. ஜீரண என்சைம்களின் செயல்களை ஒழுங்குபடுத்துகிறது.
கொழுப்பினை கரைக்கும் ஆப்பிள் பானம் : ஒரு முழு ஆப்பிளை மிக்ஸியில் அரைத்து அதில், 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கவும். மேலும், பட்டை, தேன், மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து மிக்ஸியில் அரத்து ஜூஸாக்கிக் கொள்ளுங்கள். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து, மறு நாள் குடியுங்கள்.
கேரட்- மோர் பானம் :
தேவையானவை :
மோர்- 1 கிளாஸ்
புதினா இலை - கைப்பிடி அளவு
கொத்துமல்லி தழை - சிறிதளவு
கேரட் துண்டுகள் - ஒரு கப்
வறுத்த சீரகம் - சிறிதளவு
உப்பு -ஒரு சிட்டிகை.
முதலில் கொத்துமல்லி, புதினா மற்றும் கேரட்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் மோரை சேர்த்து ஜூஸ் போலாக்கி, சீரகத்தை தூவி குடியுங்கள். இது மிகவும் ஊட்டச் சத்து நிறைந்தது.
கொழுப்பற்றது. கால்சியம் அதிகமாக இருக்கும். எலும்புகளை பலப்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்ட் அதிகம் உள்ளது,. நோய் எதிர்ப்பு சக்தியை தரும். பசியை தாங்க வைக்கும். சுறுசுறுப்பினை தரும்.
பீட்ரூட் பானம் :
பீட்ரூட் துண்டுகள் - ஒரு கப்
புதினா - ஒரு கைப்பிடி
உப்பு - ஒரு சிட்டிகை
நீர் - தேவையான அளவு
மேல் கூறியவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்து, தேவையான அளவு நீர் சேர்த்து ஜூஸாக்கிக் கொள்ளுங்கள். சிறிது உப்பு கலந்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து, குடியுங்கள். மேற்கூறிய பானங்களை வீட்டியோ தயாரித்து குடியுங்கள். தினமும் குடிக்கலாம். சீக்கிரம் உடல் இளைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
No comments :
Post a Comment