நீங்கள் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய புரோடீன் உணவுகள்!

Share this :
No comments

புரோட்டின் நமது உடலின் மிக மிக முக்கியமாக தேவைப்படும் சத்து. நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், என்சைம்கள், புரொட்டினிலிருந்துதான் உருவாகின்றன. ஆகவே உடலின் ஒட்டு மொத்த இயக்கத்திற்கும், உடல் மற்றும் உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் புரொட்டின் தேவை.

பொதுவாக குழந்தைகளுக்கு அதிக புரோட்டின் உணவுகள் தேவை. காரணம் வளரும் பருவத்தில்தான் உடல் கட்டமைப்பிற்கு இந்த சத்துக்கள் தேவைப்படும். அதுபோல சைவப் பிரியர்கள் கட்டாயம் நிறைய புரோட்டின் உணவுகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது என்ன உணவுகள் எவ்வளவு புரொட்டின் கொண்டுள்ளது என பார்க்கலாம்.

சீஸ் : அரை கப் சீஸில் 13கி புரோட்டின் உள்ளது. புரோட்டின் போலவே கால்சியமும் அதில் உள்ளது. சீஸினை பிரட்டிலோ அல்லது காய்கறிகளிலோ சேர்த்து நீங்கள் உண்ணலாம். இது மிகச் சிறந்த உணவாகும்.

சோயா மில்க் : அரை கப் சோயா மில்க்கில் 7 கி புரோட்டின் உள்ளது. பால் குடிக்கதவர்கள் சோயா மில்க்கை இரு வேளைகளில் தினமும் குடித்தால் உடலுக்குத் தேவையான புரோட்டின் கிடைக்கும்.

பாதாம்: ஒரு கைப்பிடி பாதாமில் 6 கி புரோட்டின் உள்ளது. அதனை பாதம் பொடியாக பாலில் கலந்தோ, அல்லது உணவில் சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைவுறா ஃபேட்டி அமிலம் உள்ளது. இது இதயத்திற்கு மிக நல்லது.

யோகார்ட் : ஒரு கப் யோகார்டில் 15கி புரோட்டின் உள்ளது. தினமும் ஒரு கப் யோகார்ட் எடுத்துக் கொண்டால் போதும். குறிப்பாக குழந்தைகளுக்கு தரலாம்.

பீநட் பட்டர் : 2 ஸ்பூன் பீநட் பட்டரில் 8 கி புரோட்டின் உள்ளது. எனவே தினமும் இரு ஸ்பூன் ஜூஸிலோ, பிரெட்டிலோ கலந்து சாப்பிடலாம்.

பீன்ஸ் வகைகள் : கிட்னி பீன்ஸ், ப்ளாக் பீன்ஸ், மற்றும் அவரைக்காய்கள் ஆகியவைகள் நிறைய புரோட்டின் சத்துக்களை கொண்டுள்ளது. 13-15 கி புரோட்டின் ஒரு கப் பீன்ஸ் காய்களில் உள்ளது. அதோடு நார்ச்சத்துக்களும் கிடைக்கும்.

நட்ஸ் : பூசணி விதைகள், பாதாம், வேர்கடலை, வால்நட், ஆகியவைகள் அதிகம் புரோட்டினை கொண்டுள்ளது. இவை குறைந்தது 7 கி புரொட்டினை உடலுக்கு தரும்.

கோதுமை பிரட் : கோதுமை ப்ரெட் வகைகளில் நிறைய புரோட்டின் மற்றும் நார்சத்துக்கள் உள்ளன. காய்கறிகளைக் கொண்டு பிரட் சேண்ட்விச் செய்தால் ஒரு நாளைக்கு தேவையான புரோட்டினை ஈடுகட்டலாம்.

ஆகவே, மேலே கூறிய உடலுக்கு தேவையான புரோட்டினை கட்டாயம் சேர்த்து நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை பெறுங்கள்.



No comments :

Post a Comment